இந்தியா மதச்சார்பற்ற நாடா, மதரீதியாக பிளவுபட்ட நாடா..?: சென்னை ஐகோர்ட் அதிரடி கேள்வி..!
இந்தியா மதச்சார்பற்ற நாடா, மதரீதியாக பிளவுபட்ட நாடா..?: சென்னை ஐகோர்ட் அதிரடி கேள்வி..!
தமிழகத்தில் ஆலய பிரவேச சட்டத்தின்படி, இந்து மத கோயில்களில் உள்ளே நுழைபவர்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என யாராக இருந்தாலும் முறையான உடை அணிந்துதான் வரவேண்டும் என்றும், லுங்கி, டவுசர் போன்றவைகள் அணிந்து வரக்கூடாது என்றும், இது தொடர்பான சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறி மனுதாரர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா..? அல்லது மதரீதியாக பிளவுபட்ட நாடா..? என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி கேள்வி எழுப்பினார்.
மேலும், பல கோயில்களில் உரிய நடைமுறைகளும், மரபுகளும் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு இருக்க, நாட்டில் ஹிஜாப், கோயில்களில் வேட்டி ஆகியவற்றிற்காக போராடுவது அதிர்ச்சியளிக்கிறது என்றும், மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்னைகள் மத ரீதியாக நாட்டில் பிளவை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஆகம விதிகளில் வேட்டிதான் அணிய வேண்டும் என இருப்பதாக ஆதாரங்கள் உள்ளதா..?, அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, இந்துக்கள் அல்லாதோர், வெளிநாட்டவருக்கு கோயில்களில் அனுமதி இல்லை என விளம்பரப்பலகை வைக்க கோரிய வழக்கில் தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.