‘பிங்க்’ பந்தில் இலங்கையை ‘ஒயிட்’ வாஷ் செய்த இந்தியா!!
‘பிங்க்’ பந்தில் இலங்கையை ‘ஒயிட்’ வாஷ் செய்த இந்தியா!!
இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2 - 0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
பெங்களூருவில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் விக்கெட்டுகளை இழந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டரை நாட்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 39 விக்கெட்டுகள் விழுந்தன.
ஷ்ரேயஸ் ஐயரின் ஆட்டத்தால் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அவர் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். முதல் இன்னிங்ஸில் 92 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதே போல பும்ரா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அஷ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்ட நாயகன் விருதை ஷ்ரேயஸ் ஐயர் பெற, தொடர் நாயகன் விருதை ரிஷப் பண்ட் வென்றார்.
இலங்கையில் 8 வீரர்கள் வெறும் ஒற்றை இலக்க ரன்களையே எடுக்க, கேப்டன் திமுத் கருணரத்னே 107 ரன்களும், குசல் மெண்டீஸ் 54 ரன்களும் எடுத்தனர். அது மட்டுமே இலங்கை அணிக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
newstm.in