வாழ்த்து மழையில் இந்திய வீரர்கள்.. பரிசு தொகை அறிவித்த பிசிசிஐ !
வாழ்த்து மழையில் இந்திய வீரர்கள்.. பரிசு தொகை அறிவித்த பிசிசிஐ !
ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ.40 லட்சம் பரிசு வழங்கப்படும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
14ஆவது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வந்தது. இதில் ஆன்டிகுவாவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 44.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ராஜ்பவா 5 விக்கெட்டுகளையும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை சேர்த்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. ஏற்கனவே 4 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், இந்த வெற்றியால் 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்தது.
இதையடுத்து இந்திய அணி வீரர்கள் அனைவரும் தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் சமூக வலைதளங்கள் மூலமாக இந்திய அணிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜூனியர் உலக கோப்பையை வென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு தலா 40 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இதே போன்று அணி ஊழியர்கள் மற்றும் தேர்வாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் பி.சி.சி.ஐ. செயலாளர் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தனது ட்விட்டர் பதிவில், 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கும், துணை பயிற்சியாளர்களுக்கும், தேர்வுக்குழுவினருக்கும் உலகக் கோப்பையை இவ்வளவு சிறப்பாக வென்றதற்கு வாழ்த்துகள். நாங்கள் அறிவித்துள்ள 40 லட்சம் ரொக்கப் பரிசு ஒரு சிறிய பாராட்டுச் சின்னம்தான்.., ஆனால் அவர்களின் முயற்சிகள் நாங்கள் வழங்கும் மதிப்பிற்கு அப்பாற்பட்டவை.. என்று தெரிவித்துள்ளார்.
Congratulations to the under 19 team and the support staff and the selectors for winning the world cup in such a magnificent way ..The cash prize announced by us of 40 lakhs is a small token of appreciation but their efforts are beyond value .. magnificent stuff..@bcci
— Sourav Ganguly (@SGanguly99) February 5, 2022
newstm.in