இந்தியர்கள் உக்ரைனிலிருந்து வெளியேறுங்கள்! மீண்டும் எச்சரிக்கை!!
இந்தியர்கள் உக்ரைனிலிருந்து வெளியேறுங்கள்! மீண்டும் எச்சரிக்கை!!
உக்ரைனில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்தியர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறுமாறு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில், அண்மையில் ரஷ்யா போர் பயிற்சி மேற்கொண்டது. மேலும், உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்ததால், போர் பதற்றம் உருவானது.
எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன. இந்நிலையில், உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்தியர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறுமாறு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிடைக்கும் விமானங்கள் மற்றும் தனி விமானங்கள் மூலம் உக்ரைனிலிருந்து வெளியேறுமாறும், இந்திய மாணவர்கள் அனைவரும் தனி விமானம் குறித்த தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருடன் தொடர்பில் இருக்கவும் தூதரக அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
In view of continued tensions in Ukraine, all Indian nationals whose stay is not deemed essential and all Indian students are advised to leave Ukraine temporarily. Indian students are advised to also get in touch with respective student contractors for updates on charter flights pic.twitter.com/2rHZ5lX0QA
— ANI (@ANI) February 20, 2022
கூடுதல் தகவல்களுக்கு தூதரக பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வலைதளத்தைப் பின்தொடருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 2020 அதிகாரப்பூர்வ தரவுகளின்படி உக்ரைனில் 18 ஆயிரம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்.
உக்ரைன் விஷயத்தில் ரஷ்யா, நேட்டோ நாடுகள் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தூதரகத்திடமிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷியா 1,00,000 படைகளைக் குவித்துள்ளது.
இதுதவிர போர்க் கப்பல்களையும் தயார்படுத்தி வருகிறது. மறுமுனையில், அமெரிக்காவும் ஏற்கெனவே கூடுதல் படைகளை ஐரோப்பாவுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in