இந்தியாவின் இளம் மேயர், மாநிலத்தின் இளம் எம்எல்ஏ-வை கரம் பிடிக்கிறார்..!

இந்தியாவின் இளம் மேயர், மாநிலத்தின் இளம் எம்எல்ஏ-வை கரம் பிடிக்கிறார்..!

Update: 2022-07-14 06:05 GMT

கேரள மாநிலம் பாலுசேரி தொகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சச்சின் தேவ். இவர், அக்கட்சியின் மாணவர் அணி தலைவராக இருந்து, மாநிலத்தின் இளவயது எம்எல்ஏ வாக வெற்றி பெற்றவர்.

இவரும், திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனும் காதலித்தனர். இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் 4-ம் தேதி இவர்களின் திருமணம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

ஆர்யா ராஜேந்திரன் தனது 21வது வயதில் மேயராக தேர்வானார். இதன் மூலம் நாட்டின் மிக இளம் வயது மேயர் என்ற பெருமையை பெற்றார். இவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் தான்.

 

Similar News