மதிப்பெண் கூட்டலில் கோட்டை விட்ட ஆசிரியர்களிடம் விசாரணை..!
மதிப்பெண் கூட்டலில் கோட்டை விட்ட ஆசிரியர்களிடம் விசாரணை..!
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களை கூட்டிப் போடுவதில் தவறு செய்த ஆசிரியர்களிடம் அரசுத் தேர்வுத்துறை விசாரணை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே மாதம் 5-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், மாணவர்களுக்கு மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விடைத்தாள் நகல் மதிப்பெண்களில் மாற்றம் இருப்பது தெரியவந்தது.
மதிப்பெண்களை சரியாக பதிவு செய்யாத ஆசிரியர்களை, பாடவாரியாக நேரில் அழைத்து அரசுத் தேர்வுத்துறை இணை இயக்குநர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, சுமார் 50 முதுகலை ஆசிரியர்கள் நேரில் அழைக்கப்பட்டு இன்று (20-ம் தேதி) விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவர்களிடம் இதற்கான காரணம் குறித்து விளக்கக் கடிதம் பெறப்பட்டது.
மீதமுள்ள பாடங்களுக்கு தாெடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு பள்ளிக் கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்படும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.