விபத்துகளில் காப்பீட்டு சான்றிதழ் சரிபார்ப்பு.. கட்டாயமாகிறது செல்போன் எண் !!

விபத்துகளில் காப்பீட்டு சான்றிதழ் சரிபார்ப்பு.. கட்டாயமாகிறது செல்போன் எண் !!

Update: 2022-03-04 08:30 GMT

சாலை விபத்துகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் காப்பீட்டு சான்றிதழில் சரிபார்க்கப்பட்ட செல்போன் எண்ணை இடம்பெற செய்வதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது, சாலை விபத்துகள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கான நடைமுறைகள் கட்டாயமாக்கப்படுகிறது. சாலை விபத்துகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் அதுபற்றி சம்பந்தப்பட்ட தரப்பினர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தகவல் அளிப்பது, வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம், இழப்பீடு கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணுதல் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

மேலும், காப்பீடு சான்றிதழ்களில் சரிபார்க்கப்பட்ட செல்போன் எண் இடம்பெற செய்வதும் இந்த அறிவிக்கையின் படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சான்றிதழ்களில் சரிபார்க்கப்பட்ட செல்போன் சேர்ப்பதன் மூலம் அவர்களின் நிலையை பின்தொடர்ந்து இந்த வழக்கின் தன்மையை ஆராய்ந்து விரைவாக முடிக்க முடியும் என கருதப்படுகிறது. மேலும் இழப்பீடு உள்ளிட்ட விவகாரங்களிலும் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 

newstm.in

Tags:    

Similar News