#BIG NEWS:- வட்டி விகிதம் அதிகரிப்பு.. அதிர்ச்சி கொடுத்த ஆர்பிஐ..!

#BIG NEWS:- வட்டி விகிதம் அதிகரிப்பு.. அதிர்ச்சி கொடுத்த ஆர்பிஐ..!

Update: 2022-06-08 11:36 GMT

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால வட்டி விகிதம் 0.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.

இதனால், வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி மேலும் உயர வாய்ப்புள்ளது. ஏற்கனவே கடந்த மே மாதம் ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் உயர்ந்துள்ளது. 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம், கடந்த 2 மாதத்தில் மட்டும் 0.9 சதவீதம் உயர்ந்துள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், உக்ரைனில் நடந்த போரால் உலகளாவிய அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது என்றும் சக்தி காந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.

ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு இருப்பதால் தனிநபர் கடன், வாகன கடன், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதமும் உயர உள்ளது. இதனால், மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவில் பாதிக்கப்படவுள்ளனர்.

Similar News