புதிய மதுக்கடை திறக்க இடைக்கால தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
புதிய மதுக்கடை திறக்க இடைக்கால தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் புதிய மதுபான கடை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் புதிதாக மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மணமேல்குடி பகுதியில் புதிதாக மதுபானக் கடை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று புதுக்கோட்டையைச் சேர்ந்த அம்பிகாபதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், புதிய மதுபான கடை திறக்க கூடாது என அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே,மதுக்கடை திறக்க தடைவிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் புகார் தொடர்பாக புதுக்கோட்டை ஆட்சியர் 6 வாரத்துக்குள் பரிசீலனை செய்து முடிவு எடுக்க உத்தரவிட்டார். அதன்வரை புதிய மதுக்கடை திறக்க இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, ஏழை, எளிய மக்களுக்கு பெரும் துயரமாக இருப்பது டாஸ்மாக் கடைகள்தான். அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் ஏராளமானோர் அன்றையதினம் வாங்கும் சம்பளத்தை, அன்றையதினம் மாலையிலேயே டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்துவிட்டு அழித்து வருகின்றனர்.
அதோடு மதுபழக்கத்தால் இளைஞர்கள் அதற்கு அடிமையாகி பாதை மாறி வருகின்றனர். தற்போது பள்ளி மாணவர்கள், மாணவிகளும் மது அருந்தும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழகத்தில் மதுஒலிப்பை கொண்டுவர பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
newstm.in