போரை நிறுத்துங்க - ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு..!!

போரை நிறுத்துங்க - ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு..!!

Update: 2022-03-17 04:30 GMT

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 20 நாட்கள் ஆன நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் வழக்கு தொடர்ந்தது. உக்ரைன் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ‘உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இனப்படுகொலையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. போரை நிறுத்த ரஷ்யாவிற்கு உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.

இதற்கிடையே கடந்த 7ம் தேதி நடந்த விசாரணையை ரஷ்யா புறக்கணித்தது. இருப்பினும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் முக்கிய உத்தரவு பிறப்பிப்பித்துள்ளனர்.

அதன்படி உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar News