உக்ரைன் அதிபருக்கு சர்வதேச அளவில் உயரிய விருது அறிவிப்பு !!
உக்ரைன் அதிபருக்கு சர்வதேச அளவில் உயரிய விருது அறிவிப்பு !!
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 13ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷ்ய படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தலைநகர் கீவ்-வில் தங்கியிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார். வீரர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், ரஷ்யாவின் அனுதாபியான செக் குடியரசுத் தலைவர் மிலோஸ் ஜெமன், ரஷ்யப் படையெடுப்பை எதிர்கொள்ளும் துணிச்சலான உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு உயரிய அரசு விருதை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு மிக உயர்ந்த செக் குடியரசின் கவுரவ விருதை வழங்க பாராளுமன்ற துணைக் குழு முன்மொழிந்தது. அதன் அடிப்படையில் அவருக்கு நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்படுகிறது.
அவரின் போர் தைரியத்தையும் துணிச்சலையும் பாராட்டி இந்த விருது அறிவிக்கப்படுகிறது. அமெரிக்கா அவருக்கு நேரடியாக ஆதரவு தராவிட்டாலும் கூட, அவர் தனது நாட்டின் தலைநகரில் தங்கியிருந்து வீரர்களுடன் போராடி வருகிறார். அங்கிருந்து நாட்டை வழிநடத்துகிறார், என்று தெரிவித்துள்ளார்.
newstm.in