தாய்லாந்தில் சர்வதேச கிக் பாக்சிங்.. தங்கம் தட்டினார் சென்னை மாணவி..!

தாய்லாந்தில் சர்வதேச கிக் பாக்சிங்.. தங்கம் தட்டினார் சென்னை மாணவி..!

Update: 2022-07-14 07:00 GMT

தாய்லாந்து நாட்டில் நடந்த ‘சர்வதேச ஓபன் கிக் பாக்ஸிங்’ போட்டியில், சென்னை, கொடுங்கையூரைச் பிளஸ் 2 மாணவி ரேவதி, 52 கிலோ பிரிவில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தாய்லாந்து நாட்டில், சர்வதேச ஓபன் கிக் பாக்ஸிங் போட்டி, கடந்த 7ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை நடந்தது. இதில் இந்தியா, ரஷ்யா, கம்போடியா, தாய்லாந்து உட்பட 75 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான வீரர் மற்றும் வீராங்கனையர் பங்கேற்றனர்.

இந்த சர்வதேச ஓபன் கிக் பாக்ஸிங் போட்டியில், இந்தியன் மோட்டாய் கிக் பாக்ஸிங் அமைப்பு மூலம், சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ரேவதி பங்கேற்றார்.

78 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில், 52 கிலோ பிரிவில் ரேவதி பங்கேற்றார். இதில் ரஷ்யா, கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் வீராங்கனைகளை வீழ்த்தி, தங்கப் பதக்கம் வென்றுள்ளார். நேற்று தாயகம் திரும்பிய ரேவதிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Similar News