வரும் 15-ம் தேதியுடன் விடைபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்..!
வரும் 15-ம் தேதியுடன் விடைபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்..!
பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது முக்கிய மென்பொருளான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவையை வரும் 15-ம் தேதியுடன் நிறுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
ஆரம்ப காலத்தில் பிரவுசர் என்றால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மட்டுமே இருந்தது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் கடந்த 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது.
முதன் முதலில் 1995-ல் விண்டோஸ் 95-க்கான கூடுதல் தொகுப்பாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வெளியிடப்பட்டது. பின்னர், அந்நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை இலவசமாக வழங்கத் தொடங்கியது.
கடந்த 2003-ல் 95% பயன்பாட்டின் உச்சத்தை எட்டியது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை. ஆனால், அது அதன் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. பயனர் எண்ணிக்கை வியத்தகு அளவில் குறையத் தொடங்கியது.
இதற்கு போட்டியாக, சந்தையில் நுழைந்து சிறந்த பயனர் இடைமுகங்கள், வேகமான இணைய வேகம் மற்றும் மென்மையான செயல்திறனை வழங்கத் தொடங்கினர். இதனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தனது சேவையை தொடர முடியவில்லை.
பயனர்கள் மற்ற சேவைகளை பயன்படுத்த தொடங்கிய நிலையில், அதன் சேவை பயனர்களின் மத்தியில் வெகுவாக குறைய தொடங்கியது.
அதாவது, தற்போது கூகுள் குரோம், பயர்பாக்ஸ், மைக்ரோசாப்ட் எட்ஜ் போன்ற வலுவான போட்டியாளர்கள் உள்ளதால் வேறு வழியின்றி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் நாளை மறுநாள் (15-ம் தேதி) முதல் தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதனால், 27 ஆண்டு கால வரலாறு 15-ம் தேதி முதல் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.