14 மாவட்டங்களில் மிரட்டப் போகும் கனமழை!!

14 மாவட்டங்களில் மிரட்டப் போகும் கனமழை!!

Update: 2022-06-05 12:45 GMT

 வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ,நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு,  கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசாக இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News