போதையில் பாலியல் தொல்லை.. சூடான ரசத்தை ஊற்றிய மனைவி..!

போதையில் பாலியல் தொல்லை.. சூடான ரசத்தை ஊற்றிய மனைவி..!

Update: 2022-06-15 05:15 GMT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (30). இவருடைய மனைவி குப்பம்மாள் (28).

இந்தத் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். செஞ்சியில், பஸ்களில் தின்பண்டங்கள் விற்பனை செய்து வரும் நடராஜன் மதுவிற்கு அடிமை ஆகி உள்ளார்.

இதனால், தினமும் தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டுக்கு எடுத்து வராமல் குடித்து விட்டு வீட்டில் அட்டகாசம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நடராஜனை அவருடைய மனைவி குப்பம்மாள் கண்டித்ததால் அடிக்கடி பிரச்சனை செய்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், போதைக்கு அடிமையாகிய நடராஜன் மனைவியைக் கொடுமைப்படுத்தி உள்ளார். கொடுமை தாங்க முடியாத குப்பம்மாள்  செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் கணவர் மீது புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நடராஜனை விசாரணைக்கு அழைத்த செஞ்சி அனைத்து மகளிர் காவல்துறையினர், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

மீண்டும் பிரச்சினை செய்தால் காவல் நிலையத்தில் தகவல் கூறும்படி குப்பம்மாளிடம் காவல்துறை கூறிய நிலையில், நடராஜன் மீண்டும் மது போதையில் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக மீண்டும் காவல் நிலையத்தில் குப்பம்மாள் புகார் தெரிவித்த நிலையில் நடராஜனை போலீசார் மீண்டும் விசாரணைக்கு அழைத்து எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தனது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏற்கனவே நடராஜ் இரண்டு முறை தனது கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இந்நிலையில், நேற்று இரவு கணவன் மதுபோதையில் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மனைவி குப்பம்மாள் சூடான ரசத்தை நடராஜன் முகத்தில் ஊற்றி உள்ளார்.

இதில் முகம் வெந்த நிலையில், செஞ்சி காவல் நிலையம் முன்பு வந்து மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராடினார்.

இந்த நிலையில் செஞ்சி போலீசார் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக நடராஜனை அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் நடராஜன் அட்டகாசம் செய்தார்.

இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இரண்டு மணி நேரம் போராடி ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.

Similar News