இன்ஸ்டாகிராமில் புதிய சேவை அறிமுகம்.. இதனால் என்ன பயன் தெரியுமா..?
இன்ஸ்டாகிராமில் புதிய சேவை அறிமுகம்.. இதனால் என்ன பயன் தெரியுமா..?
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், காணாமல் போன குழந்தைகளை கண்டறிய ‘ஆம்பர் அலர்ட்ஸ்’ எனும் புதிய சேவை ஒன்றினை தொடங்கியுள்ளது.
தென்னாப்ரிக்கா, தைவான், உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 25 நாடுகளில் வரும் வாரம் முதல் இந்த சேவையை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து மெட்டா நிறுவனம் கூறுகையில், ‘நாங்கள், முதன்முதலாக ‘ஆம்பர் அலர்ட்ஸ்’ சேவையை இன்ஸ்டாகிராமில் கொண்டு வருகிறோம்.
அமெரிக்காவின் ‘தேசிய காணாமல் போன குழந்தைகள் மையம்’, பிரிட்டனின் ‘தேசிய புலனாய்வு அமைப்பு’, மெக்சிகோவின் ‘அட்டர்னி ஜெனரல் ஆபிஸ்’ போன்ற அமைப்புகளுடன் ஒன்றிணைந்து இந்த சேவை செயல்படும்.
2015 முதல் முகநூல் ‘ஆம்பர் அலர்ட்ஸ்’ சேவையுடன் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு உதவி வருகிறது.
இந்த சேவையை ஆக்டிவேட் செய்ததும் உங்கள் இருப்பிடத்திற்கு அருகில், குறிப்பிட்ட தூரம் வரை பதிவாகியுள்ள வழக்கு விவரங்கள் உங்கள் டைம்லைனில் வரும்.
இதில், அந்த குழந்தைகளின் புகைப்படம், அவர்கள் குறித்த விவரங்கள், காணாமல் போன இடம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும்.
இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிர முடியும். இதன் மூலம், காணாமல் போன குழந்தைகளை கண்டறிந்து, உரியவர்களிடம் ஒப்படைக்க முடியும்’ என தெரிவித்துள்ளது.