சூப்பர் வசதி அறிமுகம்..!! இனி ஏடிஎம்மிலேயே தங்கம் வரும்..!!

சூப்பர் வசதி அறிமுகம்..!! இனி ஏடிஎம்மிலேயே தங்கம் வரும்..!!

Update: 2022-03-23 05:00 GMT

தங்கத்தை பொதுவாக நாம் நகைக் கடைகளில்தான் வாங்குவோம். நகை வாங்குவதற்காக நகைக் கடைகளில் ஏறி இறங்கி காத்துக்கிடந்து சிரமப்படுபவர்கள் ஏராளம். இந்நிலையில் ஏடிஎம்மில் பணம் எடுப்பது போல, ஏடிஎம் மெஷினில் தங்கத்தை எடுக்கும் வசதி இப்போது முதன்முதலாக ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. கோல்ட்சிகா லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் முதல் தங்க ஏடிஎம்-ஐ நிறுவியுள்ளது.

தங்கம் வாங்குவது மட்டுமின்றி விற்பனையும் செய்யக்கூடிய இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம் இதுவாகும். இந்த ஏடிஎம்கள் மூலம் தங்கம் வாங்க அனைத்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளையும் பயன்படுத்தலாம். மற்ற ஏடிஎம்களில் பணம் எடுப்பது போல் தங்க ஏடிஎம்கள் மூலம் தங்கத்தை எளிதாக எடுக்க வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ஸ்மார்ட் கார்டுகளையும் நிறுவனம் வழங்குகிறது.

Similar News