கவர்ச்சி உடையில் 'சரக்கு' விளம்பரம் : சர்ச்சையில் சிக்கிய சமந்தா..!!

கவர்ச்சி உடையில் 'சரக்கு' விளம்பரம் : சர்ச்சையில் சிக்கிய சமந்தா..!!

Update: 2022-03-11 04:45 GMT

நடிகர் நடிகைகள் தற்போது சினிமாவில் நடிப்பதை தாண்டி விளம்பர படங்களில் கோடி கணக்கில் சம்பாதிக்கின்றனர். தங்களுக்கு மார்க்கெட் இல்லை என்றாலும், சமூக வலைதளங்களில் கவர்ச்சியான வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிட்டு தங்களை ஆக்டிவாக இருப்பதைக் காட்டி வருகின்றனர்.அதில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, த்ரிஷா போன்றோரும் பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது ராய் லக்ஷ்மி, பூஜா ஹெக்டே, ஹன்சிகா மோட்வானி, காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு தங்கள் சோஷியல் மீடியாவில் விளம்பரம் செய்கின்றனர்.அதாவது வெளிநாட்டு கம்பெனிகளின் மதுபான வகைகளை ரசிகர்களிடம் அவர்கள் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.அப்படி அறிமுகப்படுத்துவது மட்டும் இல்லாமல் அந்த மதுபானத்தை எப்படி குடிக்க வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். 

இந்த நடிகைகளுக்கு ஒரு திரைப்படத்தில் நடிக்கும் பொழுது கிடைக்கும் சம்பளத்தை விட இது போன்று விளம்பரம் செய்வதால் ஏராளமான பணம் கிடைக்கின்றது.

இந்நிலையில், நடிகை சமந்தாவும் மது விளம்பர வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதற்கு ரசிகர்கள் தங்களது நெகட்டிவ் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சிகரெட், மது உள்ளிட்டவைகளை டிவியில் விளம்பரப்படுத்த முடியாது. சினிமாக்களில் அப்படியான காட்சிகள் வந்தால் கூட எச்சரிக்கை வாசங்களை வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் இப்படி 'சரக்கு' விளம்பரங்களை வெளியிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

Tags:    

Similar News