முதுகெலும்பற்றவர்கள்.. கூட்டணியை முறிக்க தயாரா..?: கேட்கிறார் நடிகை குஷ்பு..!
முதுகெலும்பற்றவர்கள்.. கூட்டணியை முறிக்க தயாரா..?: கேட்கிறார் நடிகை குஷ்பு..!
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா..? என, நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் நேற்று விடுதலை செய்தது.
இதை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகம் முழுவதும் வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “பேரறிவாளன் விடுதலையான பிறகு முதல்வர் அவரை கட்டி அணைக்கிறார். ஆனால், பாஜக அரசியல் செய்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா..? முதல்வரின் செயலை உங்களால் கண்டிக்க முடியுமா..? முதுகெலும்பற்றவர்களின் செயலாகவே காங்கிரசின் நடவடிக்கை இருக்கிறது” என்று குஷ்பு கூறியுள்ளார்.
You have @CMOTamilnadu hugging #Perarivalan after his release n in same breath we have @INCIndia accusing @BJP4India of playing politics. I challenge Cong to break its tie with #DMK if they have an iota of shame left in them n condemn CM for his actions. Spineless cry shamelessly pic.twitter.com/Kh0bKhipcK
— KhushbuSundar (@khushsundar) May 19, 2022