கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் துப்பாக்கி முனையில் கைது!!
கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் துப்பாக்கி முனையில் கைது!!
86 சவரன் நகை கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை துப்பாக்கி முனையில் காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது வீட்டில் 86 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கடந்த 8ஆம் தேதி கொள்ளைபோனது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரது வீட்டில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வரை உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, கொள்ளையன் பேருந்து மூலம் கோவை சென்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர், தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த கொள்ளையனை சுற்றி வளைத்து, துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
52 சவரன் நகை மட்டுமே வைத்திருந்த கொள்ளையன் முத்துகிருஷ்ணன், மீதமுள்ள நகைகளை விற்று பணமாக்கி பல வழிகளில் செலவழித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in