அரசியலுக்கு வருகிறாரா அஜித்? மேலாளர் விளக்கம்!!

அரசியலுக்கு வருகிறாரா அஜித்? மேலாளர் விளக்கம்!!

Update: 2022-03-02 06:15 GMT

அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ட்வீட் செய்துள்ளார்.

வலிமைபடம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24 ஆம் தேதி வெளியானதால்அஜித் அரசியலுக்கு வருகிறார்என்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பேசியதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.

அதற்கு மறுப்புத் தெரிவித்து அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் சார்பாக விளக்கம் கொடுத்துள்ளார். அதில், அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்புவதை தவிர்க்குமாறு ஊடகவியலாளர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அஜித் தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கலைக்க சொல்லியுள்ளார்.

இந்நிலையில் அவர் அரசியலுக்கு வருகிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவியது. இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.


newstm.in

Similar News