அதிமுக உடனான கூட்டனி முறிவுக்கு நயினார் நாகேந்திரனின் கருத்து தான் காரணமா ?
அதிமுக உடனான கூட்டனி முறிவுக்கு நயினார் நாகேந்திரனின் கருத்து தான் காரணமா ?
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்தித்த அவர், அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில், காவல்துறை மோசமான முறையில் கையாண்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதிமுக உடனான கூட்டனி முறிவுக்கு நயினார் நாகேந்திரனின் கருத்து காரணம் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், கோவையில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிட பாஜக தயார் நிலையில் உள்ளது என்றார்.