ஆந்திர அரசியலில் நுழைகிறாரா நடிகர் விஷால்!?

ஆந்திர அரசியலில் நுழைகிறாரா நடிகர் விஷால்!?

Update: 2022-07-02 06:15 GMT

வதந்தி பரவிய நிலையில் அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷால் ஆந்திர அரசியலில் நுழைகிறார் என்றும், அவர் ஒய்எஸ்ஆர்  காங்கிரஸ் சார்பில், சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடப் போகிறார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் விஷால், அரசியல் நுழைவு பற்றி பரவி வரும் தகவலை மறுத்துள்ளார். அத்துடன் ஆந்திர அரசியலில் தான் நுழையப் போவதாக வரும் செய்திகள் தவறு என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஆந்திர அரசியலில் நுழைவதோ, சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடவோ எண்ணம் எதுவும் இல்லை என்றும்,  அது குறித்து பரவும் செய்திகள் தவறானவை எனத் தெரிவித்துள்ளார்.

அதுபற்றி தன்னிடம் யாரும் பேசவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு என்றுமே சினிமா மட்டுமே தான் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். விஷால் ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் வேட்பு மனு சில நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


newstm.in

Similar News