குற்றங்கள் செய்தும் பணம் இருந்தால் போதுமா? - இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் !

குற்றங்கள் செய்தும் பணம் இருந்தால் போதுமா? - இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் !

Update: 2022-03-19 15:24 GMT

வழக்கை முடித்து வைப்பதாக கூறி லஞ்சம் கேட்ட குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சென்னை அடுத்த குன்றத்தூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் நந்தகோபால் (56). இவர் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. இந்த நிலையில், குன்றத்தூரில் பணிபுரிவதற்குக முன் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்தார்.

அப்போது, வழக்கு விசாரணைக்காக வருபவர்களிடம் அவர்கள் தரப்புக்கு சாதகமாக செயல்பட, இவர் லஞ்சம் கேட்பதாக ஏராளமான புகார்கள் உயர் அதிகாரிகளுக்கு சென்றன. அதன்பேரில், கூடுவாஞ்சேரியில் பணிபுரியும்போது அதிரடி நடவடிக்கைக்கு ஆளாகினார்.

அதாவது, தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் ரவி, ஆய்வாளர் நந்தகுமாரை கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினார். பின்னர் நந்தகோபால், குன்றத்தூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் ஆய்வாளராக பணியில் அமர்த்தப்பட்டார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், இவர் தனது காவல் எல்லையை கடந்து, கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவரிடம், வழக்கை முடித்து வைப்பதாக கூறி லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் ரவி கவனத்திற்கு தெரியவந்தது. அதன்பேரில் குன்றத்தூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் நந்தகோபாலை நேற்று தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


newstm.in

 

 

Similar News