ஒரே நாளில் இவ்வளவு உயர்வா..? ஷாக் கொடுத்த தங்கத்தின் விலை ..!!

ஒரே நாளில் இவ்வளவு உயர்வா..? ஷாக் கொடுத்த தங்கத்தின் விலை ..!!;

Update: 2022-02-24 11:26 GMT

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 864 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,616-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 108 ரூபாய் உயர்ந்து, ரூ.4,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 68,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,900 ரூபாய் குறைந்து ரூ.70,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

Tags:    

Similar News