அடுத்து அணு ஆயுதம் தான்? - ரஷ்ய அதிபர் மிரட்டலால் உலக நாடுகள் அதிர்ச்சி !!

அடுத்து அணு ஆயுதம் தான்? - ரஷ்ய அதிபர் மிரட்டலால் உலக நாடுகள் அதிர்ச்சி !!

Update: 2022-02-26 13:20 GMT

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் ஆற்றிய உரையில் அணு ஆயுத மிரட்டல் விடுத்திருபதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாக தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஜி7 கூட்டமைப்பும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்க திட்டமிட்டு வருகிறது.

மேற்கத்திய நாடுகள் மீது, பொருளாதார தடைகளை விதித்து ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். இதனால், உலோகங்கள் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களுக்கு, ரஷ்யாவையே நம்பியுள்ள மேற்கத்திய நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனினும் ரஷ்யா- உக்ரைன் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீதான போருக்கு முன்னதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் உரையாற்றிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ராணுவ விவகாரங்களை பொறுத்தவரையில், ''சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னரும், அதன் திறன்களில் கணிசமான பகுதிகளை இழந்த பின்னரும், இன்றைய ரஷ்யா மிகவும் பலம்வாய்ந்த அணுசக்தி நாடுகளில் ஒன்றாகவே திகழ்கிறது. பல்வேறு அதிநவீன ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒரு குறிப்பிட்ட நன்மையைக் கொண்டுள்ளது.

இந்த சூழலில், எந்தவொரு நாடும் நேரடியாக ரஷ்யாவை தாக்கினால் தோல்வியையும், பயங்கரமான விளைவுகளையும் சந்திக்க நேரிடும், என்று அவர் கூறி உள்ளார். இந்நிலையில், அணு ஆயுதப் போரையே குழப்பமான வரிகளில் புடின் சுட்டிக்காட்டி இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும், உக்ரைனுக்கு எதிரான போரில் அந்த நாட்டிற்கு ஆதரவாகவும், ரஷ்யாவுக்கு எதிராகவும் அமெரிக்காவோ அல்லது பிற நாடுகளோ, தாக்குதல் தொடுத்தால் அவர்களுக்கு பதிலடி கொடுக்க அணு ஆயுதம் உள்ளது என்கிற ரீதியில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் மிரட்டல் அமைந்து இருப்பதாக சொல்லப்படுவது உலக அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.
 
இரண்டாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணு ஆயுததாக்குதல் நடத்தியதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல லட்சம் மக்கள் அணு கதிரின் விளைவால் இன்று வரையில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
newstm.in

 

Similar News