நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணத்திற்கான காரணம் குறித்த புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரபல நடிகையான மீனாவின் கணவர் வித்யாசாகர். மென்பொறியாளரான இவர் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். நடிகை மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். 

இந்த நிலையில் கடந்த கொரோனா அலையின்போது, மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த நிலையில், கொரோனாவுக்கு பிந்தைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட வித்யாசாகர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்தார்.
 
இதனிடையே வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்ததாகவும் அவருக்கு புறாக்களின் எச்சம் பட்ட காற்றை சுவாசிப்பதால் நுரையீரலில் அலர்ஜி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் வித்யாசாகர் வீட்டின் அருகே அதிகளவு புறாக்கள் வளர்க்கப்பட்டிருந்ததாகவும் அப்போதிலிருந்தே அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் கொரோனா பாதிப்பு, அதில் இருந்து குணமடைந்தாலும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு அவரது உடல்நிலையை மேலும் பாதிக்கச்செய்து. தீவிர சிகிச்சை பெற்றபோதும் அவர் உயிரிழந்தது திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


newstm.in

Tags: