மீண்டும் வருகிறார் சின்ன தல ரெய்னா? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!

மீண்டும் வருகிறார் சின்ன தல ரெய்னா? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!

Update: 2022-02-22 18:02 GMT

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஐபிஎல் ஏலம் அண்மையில் இரண்டு நாட்களாக நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் பிரபல வீரர்களை போட்டிப்போட்டுக்கொண்டு ஏலத்தில் எடுத்தனர். இதில் எதிர்பார்க்கப்பட்டவர் சுரேஷ் ரெய்னா.

சென்னை உட்பட எந்த அணியும், சுரேஷ் ரெய்னாவை  வாங்கவில்லை. இதன் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சென்னை அணி நிர்வாகம் மீது ரசிகர்கள் பெரும் விமர்சனங்களை முன்வைத்தனர். சமூக வலைதளங்களில் கடுமையாக திட்டிக்கொண்டனர்.

இதனையடுத்து மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க சிஎஸ்கே அணி நிர்வாகம், சுரேஷ் ரெய்னாவின் வீடியோவைப் பகிர்ந்துள்ளது, அதில் அவரது சிறந்த பங்களிப்புக்காக அணி அவருக்கு சல்யூட் மற்றும் பகிரப்பட்ட அந்த 2 நிமிட வீடியோவில் அவரின் சாதனைகளைப் பற்றி பேசியுள்ளது. இந்த நிலையில், தற்போது புதிய தகவலாக அவர் மீண்டும் களத்திற்கு திரும்ப உள்ளார் என்பது பரவி வருகிறது.

அதாவது, சுரேஷ் ரெய்னா பிக் பாஷ் லீக், கரீபியன் பிரீமியர் லீக் போன்ற வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார். இதற்காக இப்போட்டிகளில் விளையாட அனுமதிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றால் தான் இந்திய வீரர்கள் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட முடியும் என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதியாகும். அதன்படி பிசிசிஐ அனுமதியளிக்கும் என்பதால் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிக்கபோகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அப்படி ஐபிஎல் தொடரில் இருந்து ரெய்னா ஓய்வுபெற்றால் மீண்டும் கிரிக்கெட் களத்தில் இறக்கி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் பார்த்தால், யுவராஜ் சிங் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பின்னர்தான் கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 லீக்கில் விளையாட அனுமதியளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



newstm.in 

Tags:    

Similar News