தேசிய சின்னம் அவமதிப்பா? - சர்ச்சைக்குள்ளான மோடி திறந்துவைத்த சிலை !
தேசிய சின்னம் அவமதிப்பா? - சர்ச்சைக்குள்ளான மோடி திறந்துவைத்த சிலை !
டெல்லியில் பிரமாண்டமான முறையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள தேசிய சின்னத்தை பிரதமா் நரேந்திர மோடி திங்கட்கிழமையன்று திறந்துவைத்தாா். இந்த சிலையின் தோற்றம் முன்பு இருந்த தோற்றத்திலிருந்து மாறுபட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அதாவது, நான்கு சிங்கங்களை உடைய நாட்டின் தேசிய சின்னத்தின் முகவாய்ப் பகுதி சாதுவாக இருந்த நிலையில், தற்போது அவை ஆக்ரோஷமாக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தேசிய சின்னத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் பிரம்மாண்ட சிலை அமைப்பதன் பேரில், தேசிய சின்னத்தையே அவமதித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும், அரசு மற்றும் நீதித் துறை என அரசியலமைபின்படி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது அமைக்கப்பட்ட தேசிய சின்னத்தை அரசின் தலைவராக இருக்கும் பிரதமா் திறந்து வைத்தது ஏன்? எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஜவஹர் சிர்கார், முந்தைய தேசிய சின்னத்துடன் புதிய சிலையை ஒப்பிட்டு பதிவிட்டுள்ளதாவது, கம்பீரமான தேசிய சின்னம் அவமதிக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்த தேசிய சின்னம் அழகாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் இருந்தது. புதிய நாடாளுமன்றத்தில் திறக்கப்பட்டுள்ள சிலை மோடியைப் போன்றது. தேவையற்ற சினம் கொண்டது. சமநிலையற்றது. இது நாட்டிற்கே தலைக்குனிவு. இதனை உடனடியாக மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் கெளரவ் கோகோய் நாடாளுமன்றமும் தேசிய சின்னமும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். தனி மனிதருக்கானது அல்ல எனக் குறிப்பிட்டு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
newstm.in