குளிக்க மினரல் வாட்டர் இல்லையா..?: படப்பிடிப்பை நிறுத்திய நடிகை..!

குளிக்க மினரல் வாட்டர் இல்லையா..?: படப்பிடிப்பை நிறுத்திய நடிகை..!

Update: 2022-05-09 16:59 GMT

பிரபல நடிகரும், இயக்குநரும், நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “நந்தகுமார் இயக்கத்தில் பிரசாந்த் மற்றும் நடிகை நிலா நடிப்பில் ‘ஜாம்பவான்’ படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற சமயம்.


அந்தப் படத்தின் பாடல் காட்சி ஒன்றில் பிரசாந்த் மற்றும் நிலா ஆகிய இருவரும் தண்ணீர் தொட்டியில் குளிக்குமாறு காட்சி இருந்தது.

அப்போது நடிகை நிலா, ‘எனக்கு ஸ்கின் அலர்ஜி இருப்பதால், தொட்டியில் மினரல் வாட்டர் நிரப்புங்கள்’ அப்போது தான் நடிப்பேன்’ என கறாராக கூறியிருந்தார்.

ஆனால், படப்பிடிப்பு நடந்த இடம் கிராமம். மேலும், மினரல் வாட்டருக்கு பட்ஜெட்டும் இல்லை என்பதால், இருக்கும் தண்ணீரிலேயே நடிக்கச் சொல்லி கேட்டோம்.

ஆனால், எதையும் காது கொடுத்து கேட்காத நிலா, சுவர் ஏறி குதித்து பிளைட் பிடித்து மும்பை சென்றுவிட்டார். அதன் பின்னர் படக்குழுவினர் மும்பை சென்று அவரை சமாதானப்படுத்தி வெளிநாட்டில் வைத்து அந்த பாடலை எடுத்து முடித்தார்கள்” என கூறியுள்ளார்.

Similar News