கொட்டும் அருவியில் இத்தனை அதிசயம் உள்ளதா !! - வீடியோ

கொட்டும் அருவியில் இத்தனை அதிசயம் உள்ளதா !! - வீடியோ

Update: 2022-07-12 20:50 GMT

பருவ மழைக்காலங்களில் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுவது வழக்கம். எனினும் இயற்கை கொடுத்த கொடையான மலைப்பிரதேசத்தை மழைக்காலங்களில் காண அத்தனை ஆனந்தமாக இருக்கும். ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் இயற்கை அழகை ரசிக்க நம்மில் பலரும் சுற்றுலா செல்வதும் வாடிக்கையானதாக மாறியுள்ளது. நீர் வீழ்ச்சிகளில் கொட்டும் நீரில் துள்ளிக்குதித்து குளிக்க அனைவருக்கும் ஆசையை தூண்டும்.

அதேபோல், இயற்கை சூழலில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். பல அதிசயங்களும் நிகழ்ந்து பிரம்மிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், நானேகாட் நீர்வீழ்ச்சியில் நடந்த நிகழ்வு இயற்கையின் மற்றொரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நானேகாட் நீர்வீழ்ச்சியில் விழும் நீர் காற்றழுத்த தாழ்வு காரணமாக மேல்நோக்கி காற்றில் செல்லும் நிகழ்வு நடந்துள்ளது.

இதுதொடர்பான வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். அதில், மகாராஷ்டிராவின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நானேகாட் நீர்வீழ்ச்சியில் நடந்த வியப்பான நிகழ்வின் காணொளி என்று அவர் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

அதாவது நீர் வீழ்ச்சியில் கொட்டும் குறைந்த அளவு நீரானது காற்றின் மேல்நோக்கிய சுழற்சியால் தரையை நோக்கி விழாமல் மேலேழும்புகிறது. இந்த அதிசய நிகழ்வை அவர் பதிவிட்டு இயற்கையின் அழகை குறிப்பிட்டுள்ளார். 



 
newstm.in
 

Tags:    

Similar News