இதுவுமா விற்பனைக்கு? – இந்தியாவில் அமோகம்!!
இதுவுமா விற்பனைக்கு? – இந்தியாவில் அமோகம்!!
இந்தியாவில் தற்போது தாய்ப்பால் விற்பனை அமோகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்ப் பாலுக்கு, பெரும் மகத்துவம் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும், பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது, உலகம் முழுவதும் உள்ள இளம் தாய்மார்களுக்கு, மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை.
விட்டமின், நோய் எதிர்ப்பு சக்தி, எளிதில் ஜீரணமாகும் சக்தி உள்ளிட்ட, குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் இருக்கிறது. தாய்ப் பாலுக்கு நிகரான சத்து, குழந்தைகளுக்கு வேறு எதிலும் கிடைப்பது இல்லை.
இத்தகைய மகத்துவம் நிறைந்த தாய்ப்பால் தற்போது வணிகப் பொருளாக மாறியுள்ளது. இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தாய்ப்பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஃப்ரீசரில் வைக்கப்பட்ட 300 மிலி தாய்ப்பால் ரூ.4,500 வரை விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
செல்வத்தில் கொழிக்கும், பெரும் பணக்காரர்கள் தான், இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள். ரத்தம், தாய்ப்பால் வணிகப் பொருளானால் ஏழைகள் தான் சுரண்டப்படுவார்கள் என்பது எழுதப்படாத விதி.
newstm.in