இது வெறும் சும்மா டிரெய்லர் தாமா? - மெயின் பிச்சர் இனிமே தான்.. ஈபிஎஸ் காட்டம் !
இது வெறும் சும்மா டிரெய்லர் தாமா? - மெயின் பிச்சர் இனிமே தான்.. ஈபிஎஸ் காட்டம் !
சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான்.. இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன.. என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இரவு இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்புத் தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியா அரசு தற்போது நகர்ப்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது.
இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன, என்று எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசு, 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு, 25 சதவீதம் சொத்து வரியும் உயர்த்தப்படுகிறது. 600-க்கு மேல் 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 1200-க்கு மேல் முதல் 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம் சொத்து வரி உயர்கிறது. 1800க்கு மேல் அதிகமான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்படுகிறது. அதேபோன்று, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளில், சொத்து மதிப்பு உயர்வு 2022-23ம் நிதியாண்டில் உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியாஅரசு தற்போது நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது,(1/2)
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 2, 2022
newstm.in