ஒரு சேலைக்காக பெற்ற மகனை இப்படியா செய்வது..?: அதிர்ச்சி சம்பவம்..!

ஒரு சேலைக்காக பெற்ற மகனை இப்படியா செய்வது..?: அதிர்ச்சி சம்பவம்..!

Update: 2022-02-11 11:29 GMT

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் ஹைரைஸில் உள்ள 10-வது மாடியின் பால்கனியில் ஒரு தாய் தனது மகனை அந்தரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், மகன் பெட்ஷீட்டில் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளார்.

ஒன்பதாவது மாடியில் பூட்டிய வீட்டின் பால்கனியில் விழுந்த புடவையை எடுக்க, தாய் ஒருவர் தனது மகனை பெட்ஷீட்டில் 9வது மாடி பால்கனிக்கு அனுப்பி, பின்னர் அவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இழுக்கும்போது மகன் பெட்ஷீட்டில் ஏறுவதை இந்த வீடியோ காட்டுகிறது.

கடந்த வாரம் ஃபரிதாபாத்தில் உள்ள செக்டார் 82 இல் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை எதிர் கட்டிடத்தில் வசிக்கும் ஒருவர் படம் பிடித்துள்ளார்.

Full View

பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரின் கூறுகையில், “பூட்டிய வீட்டிலிருந்து தனது சேலையை எவ்வாறு திரும்ப எடுப்பது என்பது குறித்து அந்தப் பெண் யாருடைய உதவியையும் ஆலோசனையையும் கேட்காமல், ஒருதலைப்பட்சமாக முடிவு எடுத்து தனது மகனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளார். இதற்கு பதிலாக அவர், யாருடைய உதவியையாவது கேட்டிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News