முடிவுக்கு வருகிறதா ஒர்க் ஃப்ரம் ஹோம்..? அலுவலகங்களை திறக்க முடிவு..!
முடிவுக்கு வருகிறதா ஒர்க் ஃப்ரம் ஹோம்..? அலுவலகங்களை திறக்க முடிவு..!
‘உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் இந்த மாதம் திறக்கப்படுகிறது. ஊழியர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்கள் வீட்டில் இருந்து பணிபுரியலாம்’ என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அலுவலர் பாரக் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், “அலுவலகத்திற்கு வந்து பணிபுரியும் முறை உடனடியாக அமலுக்கு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் மார்ச் 15ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.
எங்கிருந்து பணிபுரிந்தால் ஆக்கபூர்வமாகவும், படைப்புத்திறன் மிக்கதாகவும் உணர்கிறீர்களோ அங்கிருந்து பணிபுரியுங்கள். அது, முழு நேரமும் வீட்டில் இருந்து பணிபுரியும் முறையாக இருந்தாலும் சரி.
பணியை பகிர்ந்து கொள்வது கடினம் என்பதால் வீட்டிலிருந்து பணிபுரிய விரும்புவோர் சூழலுக்கு ஏற்ப பணி செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். அலுவலகத்தில் வந்து பணிபுரிவதே துடிப்புமிக்க நிறுவன கலாசாரத்திற்கு வழிவகுக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.