பெண் பயணியின் செயலால் நெகிழ்ந்து போன இஸ்லாமிய கார் ஓட்டுநர்!!
பெண் பயணியின் செயலால் நெகிழ்ந்து போன இஸ்லாமிய கார் ஓட்டுநர்!!
மும்பையில் பெண் பயணி ஒருவர் உபெர் ஓட்டுநரை பின் இருக்கையில் நமாஸ் செய்ய அனுமதித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரியா சிங் என்ற பெண் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் விமான நிலையத்திலிருந்து உபெர் காரினை எடுத்த 10 நிமிடங்களுக்குப் பிறகு ஓட்டுநரின் மொபைலில் அசான் ஒலிக்கத் தொடங்கியது.
அவரிடம் நமாஸ் பண்ண வேண்டுமா என்று அப்பெண் கேட்டுள்ளார். அதற்கு ஓட்டுநர் தற்போது சாத்தியமா என்று திரும்ப கேட்டார். இதனையடுத்து காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு பின் இருக்கையில் அவர் பிரார்த்தனை செய்வதற்காக தாம் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இப்படிப்பட்ட இந்தியாவைப் பற்றிதான் பெற்றோர் தனக்கு கற்றுக் கொடுத்துள்ளதாக அப்பெண் பதிவிட்டுள்ளார். இருவரும் நல்லிணக்கத்தைப் பற்றி நீண்ட நேரம் பேசினோம் என்றும் அப்பெண் கூறியுள்ளார்.
மனிதகுலத்தின் அடிப்படைகளுக்கு ஊக்கம் தருவதற்காக இதை அனைத்து சமூக ஊடக தளங்களிலும் இடுகையிட எனது விருப்பத்தை அவரிடம் கூறினேன் என தெரிவித்துள்ளார். அப்பெண்ணின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
newstm.in