இஸ்லாமிய பெண்கள் புர்கா அணியத் தடை – வெடிக்கும் சர்ச்சை!!
இஸ்லாமிய பெண்கள் புர்கா அணியத் தடை – வெடிக்கும் சர்ச்சை!!
கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு கல்லூரிகளில் புர்கா அணிந்து வரும் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு சிறுபான்மையினருக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் ஆங்காங்கே நடப்பது வழக்கமாக உள்ளது. அப்படி நடக்கும் போது அங்கிருக்கும் பகுத்தறிவாளர்கள் எதிர்ப்பை பதிவு செய்வார்கள்.
அதனைத் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை விலக்கிக் கொள்ளப்படும் அல்லது திரும்பப் பெறப்படும். அந்த வகையில் தற்போது கர்நாடகா மாநிலத்தில் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு கல்லூரிகளில் புர்கா அணிந்து வரும் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மாணவர்களின் எதிர்ப்பினால் உடுப்பியின் குந்தாப்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழக கல்லூரி, புர்கா அணிந்து மாணவிகள் கல்லூரிக்கு வருவதற்கு தடை விதித்துள்ளது.
Deplorable scenes unfolding in Karnataka, another govt college not allowing Girls with #hijab to enter classrooms. The students are crying and requesting the principal not to ruin their future with just 2 months to go for exams. pic.twitter.com/sYJzTsLuuX
— Deepak Bopanna (@dpkBopanna) February 3, 2022
அதன் தொடர்ச்சியாக, பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் புர்கா அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புர்கா அணிந்து தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முன்னதாக புர்கா அணிந்து மாணவிகள் கல்லூரிக்கு வருவதற்கு எதிர்வினையாக சில மாணவர்கள் காவி உடை அணிந்து வகுப்பிற்கு வந்தனர்.
newstm.in