இஸ்லாமியர்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும்.. பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு..!

இஸ்லாமியர்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும்.. பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு..!

Update: 2022-03-01 12:55 GMT

பீகார் மாநிலம் பிஸ்பி தொகுதியின் பாஜக எம்எல்ஏ இருப்பவர் ஹரிபூஷன் தாக்கூர். இவர், சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதில் பெயர் பெற்றவர்.

அந்த வகையில், சமீபத்தில் பத்திரிகையாளரிடம் பேசிய ஹரிபூஷன் தாக்கூர், “1947 பிரிவினையின் போது முஸ்லிம்களுக்கு தனி நாடு வழங்கப்பட்டதால், அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்.

அவர்கள் இந்தியாவில் வாழ்ந்தால், அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக வாழ வேண்டும். முஸ்லிம்கள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்புகின்றனர். அவர்களின் வாக்குரிமையை பறிக்குமாறு அரசாங்கத்திடம் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று கூறினார்.

இதுகுறித்து மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில், “தாக்கூரின் அறிக்கையில் இருந்து நாங்கள் ஏற்கனவே விலகிவிட்டோம். மேலும், அவர் ஏன் அவ்வாறு சொன்னார் என்று விளக்கம் அளிக்க  நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்” என்றார்.

இதற்கு முன்னர், பீகாரின் கோவிந்த்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுனில் மணி திவாரி தனது தொகுதி மக்களிடம் பேசுகையில், “யாராவது இந்தியாவில் வாழ வேண்டும் என்றால், அவர்கள்  ராதே.. ராதே என்று சொல்ல வேண்டும்.

ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் வந்தே மாதரம் என்று சொல்ல வேண்டும். இது, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகியின் அரசு” எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Similar News