இனி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இது கட்டாயம்..!
இனி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இது கட்டாயம்..!
டாஸ்மாக் மேலான் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்து பதிவேடுகளையும் முறையாக தினசரி பராமரிக்கப்பட வேண்டும். ஆய்வின் பொழுது ஆவணங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட கடைப் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், சமீபத்தில் உயர்ரக மதுபானக் கடைகளை ஆய்வு செய்யப்பட்டதில் கிடங்குகளிலிருந்து உயர்ரக மதுபானக் கடைகளுக்கு 750 மி.லி. அல்லது 1000 மி.லி. அளவிலுள்ள உயர்ரக மதுபானங்கள் மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்பட வேண்டும். மாறாக 375 மிலி அளவு கொண்ட நடுத்தர வகை உயர்ரக மதுபான ரகங்களும் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இது முற்றிலும் தவறாகும். ஏனவே, இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்
மேலும் மதுபான வகைகளை வைப்பதற்கான மர (அ) உலோக சட்டங்களில் அடுக்கி வைக்காமலும் முறையாக பராமரிக்கப்படாமலும் இருப்பது ஆய்வுகளின் பொழுது தெரிய வருகிறது. மதுபான வகைகளை வியாபாரக் குறியீடு வாரியாக வாடிக்கையாளர்களின் பார்வைக்கு தெரியும்படி கடையின் உட்புறத்தில் இருக்கும் ரேக்குகளில் அடிக்கி வைத்து முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
விற்பனையாகும் மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளுக்கான ரசீது கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதில் விற்கப்படுகின்ற மதுபானங்களின் பெயர், அளவு, அரசு நிர்ணமித்த விலை மற்றும் கடைப் பணியாளர்களின் கையொப்பம் இருக்க வேண்டும் உயர்ரக மதுபானக் கடைகளுக்கு உயர்ரக மதுபானங்கள் மட்டுமே 750 மி.லி. மற்றும் 1000 மி.லி. அளவில் இருந்தால் மட்டுமே சரக்குகள் அளித்திடல் வேண்டும். பிரீமியம் பிராண்டுகளின் 180 மி.லி. மற்றும் 375 மி.லி. அளவு உள்ளவற்றை வழங்கக் கூடாது. மேலும், சாதாரண வகை நடுத்தர வகை மதுபான வகைகள் உயர்ரக மதுபானக் கடைகளுக்கு வழங்கக் கூடாது.
மதுபான வகைகள் மற்றும் பீர் வகைகளின் விலைப் பட்டியல் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு தெரியும்படி இருப்பு பட்டியலுடன் ஒவ்வொரு கடையிலும் கட்டாயம் வைக்கப்படவேண்டும். மதுபான வகைகள் மற்றும் பீர் விவரம் குறித்து இருப்பு பதிவேட்டில் தினந்தோறும் எழுதி பராமரிக்க வேண்டும். மேலும் ஆய்வின் போது மேற்படி பதிவேடுகளை ஆய்வு அலுவலர்களின் பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், மதுபானக் கடைகளில் பெறப்படும் மதுபான வகைகளை உடனுக்குடன் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உற்பத்தியாளர்களிடமிருந்து மதுபானக் கிடங்கில் பெறப்பட்ட நாளிலிருந்து 90 நாள்களுக்குள் விற் செய்யப்பட வேண்டும். 90 நாள்களுக்கு மேற்பட் மதுபானங்கள் இருப்பில் இருக்கக் கூடாது.