இளைஞர்களுக்கு அனைத்துத் தகுதிகளையும் உருவாக்க வேண்டியது இந்த அரசின் கடமை - முதல்வர் ஸ்டாலின்..!!

இளைஞர்களுக்கு அனைத்துத் தகுதிகளையும் உருவாக்க வேண்டியது இந்த அரசின் கடமை - முதல்வர் ஸ்டாலின்..!!

Update: 2022-05-17 05:05 GMT

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா நேற்று  காலை நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு நன்றி. தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதனால் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட படிப்பிற்குச் சேர்க்கை நடைபெறவேண்டும். கல்வி மாநில உரிமையிலேயே இருக்க வேண்டும் என்பதை ஆளுநருக்குக் கோரிக்கையாக விடுக்கின்றோம் என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களால் முதலமைச்சராக ஆக்கப்பட்டுள்ள நான் அனைத்து மாணவச் செல்வங்களையும் முதல்வனாக்க உருவாக்கிய திட்டம்தான் நான் முதல்வன் திட்டம். அனைத்து இளைஞர்களும் செயலிலும், சிந்தனையிலும் சிறந்தவர்களாக மாற்றவே இந்த திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம் என்றார்.

மேலும், ‘வேலை இருக்கிறது. ஆனால் அதற்குத் தகுதியான இளைஞர்கள் கிடைக்கவில்லை’ எனப் பல்வேறு நிறுவனங்களில் இருந்தும் அரசிற்குக் கோரிக்கை எழுகிறது. இளைஞர்களுக்கு அனைத்துத் தகுதிகளையும் உருவாக்க வேண்டியது இந்த அரசின் கடமையாக இருக்கிறது என்று கூறினார்.

Similar News