பரவுவது இந்த வைரஸ் தான்.. பயப்பட தேவையில்லை.. அமைச்சர் முக்கிய தகவல்..!

பரவுவது இந்த வைரஸ் தான்.. பயப்பட தேவையில்லை.. அமைச்சர் முக்கிய தகவல்..!

Update: 2022-06-01 16:47 GMT

“தமிழகத்தில் 99 சதவீதம் பேருக்கு BA2 வகை வைரஸ் தான் பரவுகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: “வண்டலூர் அருகே உள்ள விஐடி கல்லூரியில் 163 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மாணவர்களை வீடுகளில் தங்கியிருக்க செய்வது, கல்வி நிறுவனத்திற்கு விடுமுறை வழங்குவது போன்ற நிலைகளை ஏற்படுத்த வேண்டாம். ஏனெனில், இந்த தொற்றை நாம் கட்டுப்படுத்திவிடலாம்.

எனினும்,கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி, நான்கு பேர் அமரக்கூடிய மேஜை என்றால் இரண்டு பேரும், 6 பேர் அமரக்கூடிய மேஜை என்றால் 3 பேரும், எட்டு பேர் அமரக்கூடிய மேஜை என்றால் நான்கு பேரும் உட்கார்ந்து உணவருந்த உத்தரவிட்டுள்ளோம்.

மேலும், மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்றோ, நாளையோ வந்துவிடும். அதைப்போல, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் BA2 வகை தொற்று தான் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், சத்திய சாய், சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் BA2 வகை கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

எனவே, அண்ணா பல்கலைக்கழகம், சத்திய சாய், சென்னை ஐஐடியில் எடுக்கப்பட்ட பரிசோதனைகள் படி 99% பேருக்கு BA2 வைரஸ் தான் உள்ளது.

ஒருவருக்கு மட்டும் BA3 வகை தொற்று பரவியுள்ளது. இதனிடையே, நாவலூரில் ஒருவருக்கு BA4 வகை கொரோனா இருந்த நிலையில், அவரும் குணமாகி விட்டார்.

ஓமைக்ரான் வகை தொற்றைப் பொறுத்த வரையில் BA1, BA2, BA3, BA4, XE உள்ளிட்ட ஏழு வகையான தொற்று உள்ளது. அந்த வகையில், தற்போது பெரும்பாலும் 99% பேருக்கு BA2 வைரஸ் தான் உள்ளது. இது A வகை தான். எனினும் மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்று கூறியுள்ளார்.

Similar News