இன்று இந்த 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!!

இன்று இந்த 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!!

Update: 2022-06-15 06:15 GMT

மேற்கு திசை காற்றின் காரணமாக, 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும்.

இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

லட்சத்தீவு, குமரிக்கடல், கேரளா, கர்நாடகா கடல் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளது. எனவே, வரும் 17-ம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

Similar News