கொண்டாட்டம் தான்.. நடிகர் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு !!
கொண்டாட்டம் தான்.. நடிகர் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு !!
நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக தாமதம் ஏற்பட்டது.
எனினும் படத்தின் பாடல் உள்ளிட்ட அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி படத்தின் மீதான அப்டேட் அதிகமானது. இதனால் எதற்கும் துணிந்தவன் படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில் தான் தற்போது கொரோனா சூழல் குறையத் தொடங்கியுள்ள நிலையில் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியாவதற்குத் தயாராக இருக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டுத் தேதியை அறிவித்து வருகின்றன. டான், ஆர்ஆர்ஆர் படங்கள் மார்ச் 25ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதேபோல் வலிமை படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 24 ஆம் தேதி வலிமை வெளியாகிறது.
இந்த நிலையில், எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் நடிகர் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
#EtharkkumThunindhavan is releasing on March 10th, 2022!
— Sun Pictures (@sunpictures) February 1, 2022
See you soon in theatres!@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan @sooriofficial #ETfromMarch10 #ET pic.twitter.com/HPJ9cYw9Eh
newstm.in