ஜேஜே பட பாணியில் காதல் தூது… 10 ரூபாய் நோட்டு வைரல்!!

ஜேஜே பட பாணியில் காதல் தூது… 10 ரூபாய் நோட்டு வைரல்!!

Update: 2022-04-21 10:27 GMT

மாதவன் ஹீரோவாக நடித்திருந்த ஜேஜே படத்தில் 100 ரூபாய் நோட்டில் தனக்கென நாயகி எழுதியிருந்ததை தேடி அலையும் காட்சிகள் 90 கிட்ஸ்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

அது போலவே ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி, விபுல் என்ற ட்விட்டர் பயனரின் பதிவுதான் நெட்டிசன்களிடையே ஹாட் டாபிக்.


அதில், 10 ரூபாய் நோட்டில் விஷால் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி எனக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். தயவுசெய்து எப்படியாவது என்னை உன்னுடன் அழைத்து சென்றுவிடு.

லவ் யூ. உன்னுடைய குசும் என எழுதி தனது காதலனுக்காக பெண் ஒருவர் இவ்வாறு எழுதியிருக்கிறார். இது தொடர்பான ட்விட்டர் பதிவை இணையவாசிகள் ரீட்வீட் செய்கின்றனர்.

அந்த ஜோடி விரைவில் ஒன்றிணைய வேண்டும் என தத்தம் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

newstm.in

Similar News