ஜே.என்.யூ பேராசிரியரை கடத்திவைத்து 3 மணி நேரம் கொடுமை!!
ஜே.என்.யூ பேராசிரியரை கடத்திவைத்து 3 மணி நேரம் கொடுமை!!
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியரை கடத்திச் சென்று அடைத்து வைத்த கும்பல் அவரை 3 மணிநேரம் கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஜே.என்.யூ-வில் சரத் பவிஸ்கார் என்பவர் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நாராயணா காவல் நிலையத்தில் புகார் ஒன்று தெரிவித்தார். அதில், கடந்த வெள்ளி இரவு பல்கலை கழகத்தின் வளாகம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தேன்.
அப்போது சாலையில் சிலர் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசில் புகார் அளிப்பேன் என கூறினேன். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர்கள் என்னை காரில் இருந்து, வெளியே இழுத்து போட்டு, கடத்தி சென்றனர் என தெரிவித்து உள்ளார்.
அதன்பின்னர் வீடு ஒன்றுக்கு சென்று 3 மணிநேரம் வரை அடைத்து வைத்தனர். அவரை அடித்து, தாக்கியதுடன் அவருடைய பணமும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. கடத்தல்காரர்களிடம் தன்னை விடுவிக்கும்படி அவர் கூறியுள்ளார்.
ஆனால், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து, உதைத்ததுடன், அச்சுறுத்தலும் விடுத்து உள்ளனர். பணம் கேட்டு மிரட்டியும் உள்ளனர். இதுபற்றிய வழக்கில் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தின் ஆசிரியர்கள் கூட்டமைப்பு வருத்தம் தெரிவித்து உள்ளது. குற்றவாளிகளை டெல்லி போலீசார் கைது செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளதுடன், பேராசிரியர் மற்றும் அவரது குடும்பத்துக்கு போலீசாரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
newstm.in