கேரள மக்களுக்கு ஜாக்பாட்.. பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைப்பு

கேரள மக்களுக்கு ஜாக்பாட்.. பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைப்பு

Update: 2022-05-22 07:31 GMT

பஞ்சாப் உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை எதிர்பார்த்ததுபோன்றே 10 ரூபாய் உயர்ந்தது. அந்த வகையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. 

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றிரவு அறிவித்தார். 

இந்த வரிக்குறைப்பின் மூலம் பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ. 9.5 மற்றும் டீசல் ரூ.7 குறையும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கேரள மக்களுக்கு அம்மாநில அரசு நல்ல செய்தி ஒன்றை வெளியிட்டது. 

அதாவது,எ கேரளாவில் பெட்ரோல் மீதான வாட் வரியில் ரூ.2.41, டீசல் மீது ரூ.1.36 குறைத்து கேரள அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த நிலையில் கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையை கேரள அரசு வரவேற்பதாக கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பெட்ரோல் விலை குறைப்பு குறித்து அறிவிப்பை விமர்சித்துள்ள திருணாமுல் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசு இன்னும் வரியை குறைத்து இருக்கலாம் என கூறியுள்ளது. 

 

newstm.im

 

 

Similar News