லாட்டரியில் ட்ரக் டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்!!
லாட்டரியில் ட்ரக் டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்!!
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் ட்ரக் டிரைவராக உள்ள இல்லினாய்ஸ் (48) என்பவருக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்திருக்கிறது.
லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கமுடைய இல்லினாய்ஸ் வழக்கம்போல அண்மையில் ஒரு லாட்டரி வாங்கியிருக்கிறார். அதில் அவருக்கு பணம் விழுந்திருப்பதாக லாட்டரி ஏஜென்சியில் இருந்து தகவல் வந்தது.
அதிகபட்சம் தனக்கு 2,000 டாலர் அதாவது ஒன்றரை லட்சம் ரூபாயே கிடைத்திருக்கும் என அவர் எண்ணியிருக்கிறார். ஆனால் இல்லினாய்ஸ்க்கு அல்வா மாதிரி 1 மில்லியன் டாலர். இந்திய மதிப்பில் 7.9 கோடி ரூபாய் அவருக்கு லாட்டரி மூலம் கிடைத்திருக்கிறது.
டிரக்குக்கு திரும்பியதும் டிக்கெட்டை ஸ்க்ராட்ச் செய்து பார் கோடை ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அதில், 1 மில்லியன் டாலர் வென்றுள்ளதாக இருந்ததை பார்த்த அவரால் நம்ப முடியவில்லை.
ஏஜென்சியில் இருந்து அழைப்பு வரும் வரை வென்றதை நம்பவே இல்லை என்று இல்லினாய்ஸ் கூறியிருக்கிறார். லாட்டரியில் வந்த பணத்தை வைத்து புது ட்ரக் வாங்கப் போவதாகவும், எஞ்சிய பணத்தை சேமிப்பில் செலுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
newstm.in