ஐபிஎல் 2022 தொடரிலிருந்து விலகிய ஜடேஜா.. அணி நிர்வாகத்துடன் மோதலா?

ஐபிஎல் 2022 தொடரிலிருந்து விலகிய ஜடேஜா.. அணி நிர்வாகத்துடன் மோதலா?

Update: 2022-05-12 07:00 GMT

ஐபிஎல் 2021ஆம் ஆண்டு தொடர்வரை மிக வலுவான அணிகளாக சென்னை அணியும், மும்பை அணியும் இருந்துவந்தன. இவ்விரு அணிகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆனால், இந்தமுறை அது அப்படியே தலைகீழாக மாறியது. சென்னை அணியும், மும்பை அணியும் தொடக்கத்தில் வெற்றிபெற முடியாமல் தவித்தன. தற்போது கடைசி இரண்டு இடங்களுக்கு சென்னை, மும்பை அணிகள் சண்டை போடும் நிலை ஏற்பட்டது. 

சென்னை அணியைப் பொறுத்தவரையில் யாரும் எதிர்பாராத வகையில் இந்தமுறை சென்னை அணி ஜடேஜா தலைமையில் களமிறங்கியது. சென்னை அணியில் ஆல் ரவுண்டராக கலக்கும் ஜடேஜா இந்தமுறை கேப்டனாக ஜொலிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மாறாக ஜடேஜா கேப்டனாக மட்டுமல்ல, ஆல்ரவுண்டராகவும் செயல்பட தடுமாறினர். 

பேட்டிங்கில் கோட்டைவிட்டாலும் பந்துவீச்சில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங்கிலும், ஃபீல்டிங்கிலும் சொதப்பும் சூழல் இருந்தது. கேப்டனாகவும் அவர் சரிவர செயல்படவில்லை. இதனால் தோனியே மீண்டும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டுவருகிறார்.

இந்த நிலையில், கடந்த மே 4ஆம் தேதி பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கேட்ச் பிடிக்கும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதனையடுத்து, மே 8ஆம் தேதி டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அவர் அணியில் இடம்பெறவில்லை. இந்தநிலையில், காயம் காரணமாக இந்த ஐ.பி.எல் தொடரிலிருந்து ஜடேஜா விலகுகிறார் என்று சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணி நிர்வாகத்திற்கும் ஜடேஜாவுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளதாகவும் தகவல்கள் பரவிவருகின்றன.

newstm.in

Tags:    

Similar News