சிறையில் இருந்து வெளியே வந்ததும் பகீர் கிளப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் !!

சிறையில் இருந்து வெளியே வந்ததும் பகீர் கிளப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் !!

Update: 2022-03-12 11:18 GMT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரி போல் நடந்து கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது, சென்னை மாநகராட்சி 49ஆவது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை அதிமுகவினர் தடுத்துநிறுத்தி பிடித்தனர். பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில், நரேஷை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படத்தியது.

இது தொடர்பான புகாரில் ஜெயக்குமார் மீது பதிவான வழக்கில் கைது செய்யப்பட்டார்.  அதனைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2ஆவது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3ஆவது வழக்கும் பதிவு செய்யப்பட்டன. இந்த சூழலில் திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் அவருக்கு ஜாமீ்ன் வழங்க கீழ் நீதிமன்றம் மறுத்து விட்டதால், அவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இதையடுத்து கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கண்டோமெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.  

இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், சென்னை புழல் சிறையில் இருந்து இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், மாதவரம் மூர்த்தி மற்றும் ஏராளமான அதிமுகவினர் சிறை வளாகத்தில் குவிந்து அவரை வரவேற்றனர்  இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொய் வழக்கு போட்டு என்னை சிறையில் தள்ளியது திமுக அரசு. தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவினரை தடுத்ததால் கைது செய்யப்பட்டேன்.

ஹிட்லரின் மறு உருவம் தான் ஸ்டாலின். ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. முன்னாள் அமைச்சர்கள் மீது மட்டுமே திமுக அரசு கவனம் செலுத்துகிறது. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுக்கு நல்லது எதுவும் செய்யவில்லை, என்று தெரிவித்தார்.  

 

newstm.in

Similar News