அதிர்ச்சியில் நகை பிரியர்கள்.. ரூ.39 ஆயிரத்தை தாண்டியது தங்கம்..!
அதிர்ச்சியில் நகை பிரியர்கள்.. ரூ.39 ஆயிரத்தை தாண்டியது தங்கம்..!
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை முதல் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று (8ம் தேதி) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.39,056க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து, ரூ.4,882க்கு விற்பனையாகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் 8 கிராம் விலை 4,2248 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதுபோன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு உயர்ந்து, ரூ.71.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.71,300-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.39 ஆயிரத்தை தாண்டி இருப்பது நகை பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.